• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலக்ஸ்டர் குக் ஓய்வு

September 3, 2018 தண்டோரா குழு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் அறிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும்,5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்நிலையில்,இந்தியாவுக்கு எதிராக நடக்கும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் விடைபெறப்போவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலய்ஷ்டர் குக் அறிவித்துள்ளார்.
33 வயதான அவர்,இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 சதம் உள்பட 12 ஆயிரத்து 254 ரன்கள் குவித்துள்ளார்.இவர் 59 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்த குக் 24 வெற்றி,22 தோல்வி,13 டிரா கண்டுள்ளார்.அதைபோல் டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை நீண்ட காலம் தன்வசம் வைத்துள்ளார்.

மேலும்,டெஸ்ட் போட்டியில் 30 வயது 159 நாட்களில்,அலெஸ்டர் குக் 9 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.சச்சின் இந்த சாதனையை 30 வயது 253 நாட்களில் படைத்திருந்தார்.இந்த சாதனையை குக் 94 நாட்களுக்கு முன்னதாகவே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு குறித்து அலஸ்டைர் குக் கூறுகையில்,

“வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட்டை நேசிப்பதாகவும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிட இதுவே சரியான தருணம் என நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,கடந்த சில மாதங்களாக ஆழ்ந்து சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும்,இந்தியாவுக்கு எதிராக ஓவலில் நடைபெறும் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாகவும் குக் தெரிவித்துள்ளார்”.

மேலும் படிக்க