• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கேரள முதல்வர் பாராட்டும் நன்றியும் !

September 4, 2018 தண்டோரா குழு

கேரளாவில் சமீபத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். மழையால் சேதமான புகுதிகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 483 பேர் உயிரிழந்தனர்.

இதிலிருந்து மக்களை மீட்டு அம்மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர நிதியுதவி அளிக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை நேரடியாக அனுப்பிவைக்குமாறு நடிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து திரைத்துறையினிடமும் வேண்டுகோள் வைத்தார்.

இதையடுத்து, முதல் கட்டமாக நடிகர் சங்கம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடிகர், நடிகைகள் மற்றும் திரைத்துறையினர் அனைவரும் பெரும் தொகைகள் நிதியுதவியாக அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சங்கத்தின் ஒத்துழைப்புக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து கேரளா முதல்வர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் அக்கடிதத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க அரசு எல்லா நடவடிக்கைகளையும் வேகமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க