September 6, 2018 தண்டோரா குழு
பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா நேற்றிரவு உடல்நலக்குறைவால் அவரது வீட்டில் காலமானார்.
ராஜாதிராஜா,கரகாட்டக்காரன்,வைதேகி காத்திருந்தாள்,அலைகள் ஓய்வதில்லை,கோட்டை மாரியம்மன் உள்பட பல்வேறு திரைப்படங்களிலும் தங்கம்,பாசமலர், ஆகிய சின்னத்திரைகளில் புகழ் பெற்றவர் நடிகர் வெள்ளை சுப்பையா (வயது 78). இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி.கடந்த 5 வருடங்களாக கோவை மாவட்டம் மேட்டுபாளையம் சிவன்புரம் திலகர் வீதியில் வசித்து வந்த இவருக்கு,கடந்த 1 வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு உயிரிழந்தார்.
சிவாஜி,எம்.ஜி.ஆர்,ரஜினி,கமல்,விஜயகாந்த் உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்த வெள்ளை சுப்பையாவுக்கு தமிழக அரசின் கலைச்செல்வன் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.கடந்த 25ஆம் தேதி கோவையில் நடைபெற்ற விழாவில் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நடிகர் வெள்ளை சுப்பையாவிற்க்கு கலை பண்பாட்டுத்துறை சார்பில் “கலை முதுமணி “என்ற விருதும்,பொற்கிழியும் வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.