• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிருஷ்ணகிரி அருகே செல்போன் பேச்சால் வந்தவினை, மனைவி தற்கொலை

August 26, 2016 தண்டோரா குழு

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள ஜெகதேவி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் செந்தில். இவரும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா(26) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி செல்போன் பேசுவது குறித்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றும் மீண்டும் செல்போனில் பேசி கொண்டிருந்த தனது மனைவியிடம் யாரிடம்
போன் பேசுகிறாய் எனச் செந்தில் தகராறு செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சந்தியா, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த பர்கூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை
மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து செந்திலை தேடிவருகின்றனர்.

மேலும், குருபரப்பள்ளி அருகேயுள்ள பீமாண்டப்பள்ளியை சேர்ந்த எல்லப்பன் மகன் அறிவழகன்(19). இவர் டிரைவர் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இவர் கடந்த 20 நாட்களாக வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது அம்மாவிடம் வெளியில் சென்றுவருவதாக கூறிச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்த போது கொள்ளப்பள்ளி ஏரி அருகேயுள்ள வேப்பமரத்தில் அறிவழகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் குருபரப்பள்ளி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து குருபரப்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க