September 7, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய உள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.டி20 தொடரை இந்தியாவும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.இப்போட்டியில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக ஹனுமா விஹாரி அறிமுக வீரராகக் களமிறங்குகிறார். அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை.மேலும்,இத்தொடரில் 5 போட்டிகளிலும் இங்கிலாந்து அணியே டாஸ் வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.