• Download mobile app
10 Nov 2024, SundayEdition - 3196
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிரைவர் இல்லாமல் இயங்கக்கூடிய தானியங்கி டாக்ஸி சிங்கப்பூரில் அறிமுகம்

August 26, 2016 தண்டோரா குழு

டிரைவர் இல்லாமல் தானாக இயங்கக் கூடிய வாடகை மோட்டார் வண்டி சேவையை நியுடோனோமி நிறுவனம் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. வாகன ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்கக்கூடிய கார்களை உருவாக்கும் முயற்சியில் கூகுள், உபேர், டெஸ்லா, போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மற்ற நிறுவனங்களுக்கு முன்னரே தானியங்கி வாடகை மோட்டார் வண்டி சேவையை நியுடோனோமி நிறுவனம் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய சேவை மூலம் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த வண்டிகளை வாடிக்கையாளர்கள் அழைக்கலாம். ஆனால் இது முதல் கட்ட முயற்சி என்பதால், பாதுகாப்பிற்காக டிரைவர் ஒருவரும் அதில் இருப்பார். ஆனால் அவர் அந்த வண்டியை இயக்க மாட்டார்.

ஒருவேளைத் தானியங்கி வண்டியின் தொழில்நுட்பம் செயலிழந்துவிட்டாலோ, தவறுகள் ஏதேனும் நடந்தாலோ மட்டுமே அந்த நேரத்தில் டிரைவர் அந்த வாகனத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார். ஏற்கனவே உபேர் நிறுவனம் அமெரிக்காவின் ஒரு மாகாணத்தில் மட்டும் தானியங்கி வாடகை மோட்டார் வண்டி சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தது.

மேலும், அந்த வண்டி சேவை மட்டுமல்லாது தானியங்கி டிரக்குகளும் தற்போது சோதனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தங்கள் நிறுவனத்தின் செயலியை கைப்பேசியில் தரவிறக்கம் செய்து, சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் வரையிலான இந்த வாடகை மோட்டார் வண்டியின் சேவையில் பொதுமக்களும் இலவசமாகப் பங்கேற்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, இன்றைய சோதனை ஓட்டத்தில் சிலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தானியங்கி வாடகை மோட்டார் வண்டியில் இலவசமாகப் பயணம் செய்த அனுபவம் மகிழ்ச்சிகரமாக அமைந்திருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க