September 8, 2018
தண்டோரா குழு
பிரபலமான பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது.
பிரபலமான பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி பார்வையற்றவரான இவர் பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.பின்னர் விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ படத்தில் இடம் பெற்ற ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் அவரை மேலும் பிரபலப்படுத்தியது.
இந்நிலையில் விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது.ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணம் நின்று போனது.தற்போது மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருடன் விஜயலட்சுமிக்கு திருமணம் நடைபெறவுள்ளது.இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் நாளை மறுநாள் (10–ந்தேதி) விஜயலட்சுமியின் வீட்டில் நடைபெறுகிறது.திருமணம் அக்டோபர் 22–ந்தேதி வைக்கம் மகாதேவ கோவிலில் நடக்கிறது.வித்தியாசமான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்த வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.