September 10, 2018
தண்டோரா குழு
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடித்த ‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சாம் ஆண்டன்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஜீ.வி. பிரகாஷ் குமாரை வைத்து ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தை இயக்கினார்.இதனைத்தொடர்ந்து தற்போது,சாம் ஆண்டன் அதர்வாவை வைத்து ‘100’ என்ற படத்தில் இயக்கி வருகிறார்.இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடித்து வருகிறார்.இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,சாம் ஆண்டன் புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் கதையின் நாயகனாக பிரபல காமெடியன் யோகி பாபு நடிக்கவுள்ளாராம்.தனியார் செக்யூரிட்டியாக வேலை செய்யும் யோகி பாபு,மிகப்பெரிய குற்றத்தில் இருந்து அனைவரையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதையாம்.எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.