• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இறந்த பெண்ணின் உடலை உடைத்து மூட்டைக் கட்டி எடுத்துச் சென்ற ஊழியர்கள், ஒடிசாவில் தொடரும் சோகம்

August 26, 2016 தண்டோரா குழு

ஒடிசா மாநிலம், காலாகேண்டியில் நேற்று காச நோயால் இறந்த தனது மனைவியின் உடலைச் சொந்த கிராமத்திற்கு எடுத்துச்செல்ல மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்காததால் மனைவியின் சடலத்தை 10 கிமீ தூரத்திற்கு தனது தோளில் சுமந்தபடியே சென்ற கணவரது வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் அதே மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ஓடிஸா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் மோதி 80 வயது விதவையான சாலாமணி பெகெரா என்பவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், ரயில்வே போலீசார் 12 மணி நேரம் தாமதமாகவே வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வந்த அவர்கள் சடலத்தை மீட்டனர். எனினும், பிரேத பரிசோதனைக்காக 30 கிமீ தொலைவில் உள்ள பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்குத் தான் கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால், அங்கு ஆம்புலன்ஸ் வசதி ஏதும் இல்லாத காரணத்தால் சடலத்தை அருகிலிருக்கும் ரயில்நிலையம் கொண்டு சென்று அங்கிருந்து ரயில் மூலம் எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சாலாமணி உடலை உள்ளூர் சுகாதார மைய ஊழியர்கள் ரயில்நிலையம் வரை தூக்கிச் சென்றுள்ளனர். நீண்ட நேரம் ஆனதால் உடலில் விரைப்பு தன்மை கூடி உடலைக் கொண்டு செல்ல முடியாமல் ஊழியர்கள் சிரமப்படப்பட்டுள்ளனர். இதையடுத்து சுகாதார மைய ஊழியர் ஒருவர் சாலாமணியின் இடுப்பில் ஏறி நின்று உடலை இரண்டாக ஒடித்துள்ளார்.

பின்னர், இரண்டு ஊழியர்களும் உடலை பிளாஸ்டிக் கவரில் போட்டு, துணியால் மூட்டைக் கட்டி
மூங்கிலில் தொங்கவிட்டு எடுத்துச் சென்றனர். தற்போது இந்தப் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க