September 11, 2018
தண்டோரா குழு
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி 2 உருவாகியுள்ளது.தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.மேலும் வரலட்சுமி,வித்யா,கிருஷ்ணா,டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக டோவினோ தாமஸ் நடித்து வருகிறார்.தற்போது,படப்பிடிப்பு முடித்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியிடக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.