September 14, 2018
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி கேப்டன் பதவியை கோலிக்கு விட்டுகொடுத்தது ஏன் என தற்போது விளக்கமளித்துள்ளார்.
கேப்டன் கூல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி தோனி உலகக்கோப்பை உள்ளிட்ட பல்வேறு கோப்பைகளை இந்திய கிரிக்கெட் அணிக்கு பெற்றுத் தந்தவர். இதுமட்டுமின்றி பல்வேறு சாதனைகளையும் புரிந்துள்ளார். கடந்த 2014-ல் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வுபெற்ற இவர், 2017 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் 20 – 20 போட்டிகளிலிருந்து கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.
அப்போது,தோனி மீது அணி நிர்வாகம் செலுத்திய அழுத்தத்தின் காரணமாகவே அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. எனினும், இது குறித்து தோனி பதிலளிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர்,
எனக்கு அடுத்து வரும் கேப்டன் 2019 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்ய தேவையான நேரத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே நான் ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து விலகினேன். இந்திய அணி ஒரு தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதை தவறவிட்டுள்ளது. அதனால் தான் வீரர்கள் கடினமான நேரத்தில் தடுமாறுகின்றனர். போதிய பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்காமல் இருந்ததுதான் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தோல்விக்குக் காரணம் எனக் கூறியுள்ளார்.