September 14, 2018
தண்டோரா குழு
தமிழில் காதல் கண்கட்டுதே படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா. அதன் பின் ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், கோவையை அடுத்த சரவனம்பட்டி பகுதியில் புதியதாக மேட் ப்ரைஸ் உணவக திறப்பு விழாவவை நடிகை அதுல்யா ரவி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தற்போது நாடோடிகள் 2 படத்தில் சசிகுமாருடன் நடித்து வருவதாகவும் நாடோடிகள் முதல் பாகம் வெகுமான ரசிகர் களை ஈர்த்ததுனால் இரண்டாம் பாகமும் சிறப்பான வெற்றியை பெறும் என்றும், விக்ராந்தின் சுட்டு பிடிக்க உத்தரவு படத்திலும் நடித்து வருவதாகவும், இது ஒரு திரில்லர் படம் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.