• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உணவு, தண்ணீர் இல்லாமல் இருட்டறையில் கிடந்த குழந்தைகள் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட அவலம்

August 27, 2016 தண்டோரா குழு

குடிகாரத் தந்தையால் ஒரு இருட்டறைக்குள் வைத்துப் பூட்டப்பட்ட இரு குழந்தைகள் சுமார் 3 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தலைநகரான டெல்லியின் சமயபூர் என்னும் இடத்தில் உள்ள ஒரு வீட்டில் பப்லு(35), தன்னுடைய மனைவி ரோஷி மற்றும் இரு குழந்தைகள் அல்கா (8), ஜோதி (3) மற்றும் ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இரு குழந்தைகளை விட்டுவிட்டு மகனை மட்டும் அழைத்துக்கொண்டு ரோஷி சென்றுவிட்டார்.

இதையடுத்து, எந்த வேலைக்கும் செல்லாத பப்லு தன்னுடைய இரு குழந்தைகளையும் ஒரு இருட்டறையில் அடைத்துவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்து ஒருவித துர்நாற்றம் வருவதைக் கண்ட பக்கத்து வீட்டார் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு வந்து பூட்டிய அறையை உடைத்துப் பார்த்ததில் உடலில் புழுக்கள் தோன்றிய மோசமான நிலையில் இரு குழந்தைகளும் சுருண்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனே அந்தக் குழந்தைகளை மீட்டு பாபா அம்பேத்கர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குழந்தைகளின் தந்தை பண்டி ஒரு முழுநேரக் குடிகாரர் என்றும் குடி போதையில் இருந்த அவர் இரு குழந்தைகளையும் வீட்டில் வைத்துப் பூட்டியதாகவும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், மூன்று நாட்கள் வரை தண்ணீர், சாப்பாடு இல்லாமல் இரு குழந்தைகளும் இருட்டறைக்குள் தவித்துள்ளனர்.

அந்த அறையில் வெளிச்சமும் காற்றும் இல்லாததால் இரண்டு குழந்தைகளின் உடல்களில் புழுக்கள் தோன்றும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. தற்போது சிகிச்சையினால் இருவரின் உடல் நலத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இரண்டு சிறுமிகளை தான் சந்தித்ததாகவும், அவர்களுடைய உடலில் புழுக்கள் உண்டாகி நாற்றம் எடுக்கும் அளவிற்கு அவர்களுடைய நிலை மோசமாக இருந்ததாகவும், அவர்களுடைய பெற்றோருக்கு கடுமையான தண்டனை அளிக்கவேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைமை அதிகாரி, சுவாதி மலிவால் தெரிவித்தார்.

பண்டி, ஜோதி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரு மாதத்திற்கு முன் ஜோதி வேறு ஒரு ஆணுடன் அவர்களுடைய மகனை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும், மனைவி வேறு ஒரு ஆணுடன் சென்றதால் அவர்களுடைய இரண்டு மகள்களைச் சரிவர கவனிக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் காவல் துறை
அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர்.

மேலும் காவல்துறை அதிகாரிகள் அந்தச் சிறுமிகளின் தாயாகிய ஜோதியை தொடர்புகொண்டு அவர்களைக் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டனர். ஆனால் தான் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பதாகக் கூறிவிட்டார்.

இந்தச் சிறுமிகளின் நிலையை அறிந்தவர்கள் அவர்களுக்கு பண உதவி செய்துவருவதாகவும், தற்போது காவல்துறையே அவர்களைக் கவனித்துக்கொண்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க