• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆபரேசன் ரோமியோ ரிட்டர்ன்ஸ், டெல்லியை கலக்கிய காவல்துறை

August 27, 2016 தண்டோரா குழு

நமது தேசத்தின் தலைநகரான புது டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள சாலையில் செல்லும் பெண்கள், கல்லூரி, மற்றும் பள்ளி மாணவிகளைக் கேலி, கிண்டல் செய்த சுமார் 50 இளைஞர்களை டெல்லி காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக 2 மணி நேரத்தில் கைது செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் குருகிராம் பகுதியிலுள்ள மகாத்மா காந்தி சாலையில், தினமும் வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை அப்பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்து வருவதாக குருகிராம் காவல்துறைக்கு தொடர்ந்து பல புகார்கள் வந்தது. இதைத் தொடர்ந்து, 'ஆபரேஷன் ரோமியோ ரிட்டன்ஸ்' என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள பெண்களை கேலி செய்பவர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டு களமிறங்கினார்கள்.

அதற்காக மாறுவேடத்தில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் அங்கு இரண்டு மணி நேரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள், சாலையில் செல்லும் பெண்களைக் கேலி செய்துகொண்டு இருந்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், பெண்கள் மற்றும் மாணவிகளைக் கேலி, கிண்டல் செய்த 50 இளைஞர்களை அதிரடியாகக் கைது செய்தனர்.

காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க