September 18, 2018
தண்டோரா குழு
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறக்கிய முகமது ஷேசாத் மற்றும் ஜனத் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.அதை தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவரில் 249 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி,ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.இதனால் இலங்கை அணி 41.2 ஓவரில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இலங்கை அணியில் அதிகபட்சமாக உபுல் தரங்கா 36 ரன்களும்,திசாரா பெராரா 28 ரன்களையும் எடுத்திருந்தனர்.இதைத்தொடர்ந்து 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபரா வெற்றி பெற்றது.இந்த தோல்வி மூலம் ஆசிய கோப்பை தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியது.