September 19, 2018
தண்டோரா குழு
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ஹாங்காங் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – ஹாங்காங் அணிகள் மோதின.டாஸ் வென்ற ஹாங்காங் அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.பின்னர் இந்தியாவின் ரோகித் சர்மா,ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.அதில் ரோஹித் ஷர்மா 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து தவான் உடன் ஜோடி சேர்ந்த அம்பதி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது.இந்நிலையில் ஷிகர் தவான் 127 ரன்களுடனும்,அம்பதி ராயுடு 60 ரன்களிலும் வெளியேறினர்.அதன் பின் வந்த தோனி (0),தினேஷ் கார்த்திக் (33),சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 286 என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிஷாகத் கான் மற்று அன்சுமன் ராத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் சேர்த்தது.தொடக்க வீரர்கள் நிஸகத் கான்(92) அன்ஷுமந்த் ரத்(73) ரன்களில் வெளியேறினர்.அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஹாங் காங் அணி தடுமாறியது.இறுதியில் ஹாங்காங் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 259 ரன்கள் எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.