September 19, 2018
தண்டோரா குழு
இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால்,அர்ஜுன் சமந்தா நடிப்பில் வெளியான இரும்புத்திரை படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில்,இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் அடுத்த படத்தில் உதயநிதி அல்லது கார்த்தி நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில்,இயக்குநர் மித்ரன் அடுத்ததாக சிவகர்த்திகேயனை வைத்து இயக்கவுள்ளார்.அதிரடி,ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருப்பதாகவும்,இந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.