காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கான குழு இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என்று தமிழக காங். கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது.
திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவது குறித்து கட்சி தலைமையிடம் பேசுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லி சென்றார். பின்னர் சென்னை வந்த அவருக்கு அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கான குழுவை காங்கிரஸ் மேலிடம் இன்று அல்லது நாளை அறிவிக்கும். அதனைத் தொடர்ந்து ஓரிரு நாளில் திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றார்.
திருப்பூரில் பிரத்யேக வைர மற்றும் தங்க ஆபரண ஷோரூமை க்ளோ பை கீர்த்திலால்ஸ் தொடங்கியுள்ளது
கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டோரா லாசிக் அறுவை சிகிச்சை அறிமுகம்
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்