September 20, 2018
தண்டோரா குழு
ஆசிய கோப்பைக்கான போட்டித் தொடரில் இந்திய அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15–ந் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றது.இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை,வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்துக் கொண்டுள்ளது.இத்தொடரில் நேற்று இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின.இதில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியின் போது 18-வது ஓவரை வீசிய இந்தியாவின் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதால்,பெவிலியன் திரும்பினார்.அத்துடன்,அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.அதைபோல்,ஷர்துல் தாகூர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல் ஆகியோரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து,இந்த மூவரும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விலகியுள்ளனர். வர்களுக்கு பதிலாக தீபர் சாஹர்,ஜடேஜா மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.