August 29, 2016
தண்டோரா குழு
திருப்பூர், ஊத்துகுளி சாலையில் உள்ள முதல் ரயில்வே கேட் பகுதியில், உள்ள ரயில் பாதையை கடந்து செல்லும் கேபிள் ஒயரில் பழுது ஏற்பட்டதை அடுத்து அதைச் சரி செய்யும் பணியில், சடையன், சின்னசாமி மற்றும் ராமலிங்கம் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ரயில் இரும்புப் பாதையில் இருந்த அவர்கள் மீது, ஈரோட்டில் இருந்து வந்த ரயில் மோதியது. இதில் சடையன் மற்றும் சின்னசாமி ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.
ராமலிங்கம் என்பவர் படுகாயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். அது குறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.