September 24, 2018
தண்டோரா குழு
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி படுதோல்வியடைந்தையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் கேப்டன் மேத்யூஸ் பதவியைப் பறித்தது.
15வது ஆசிய கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிற்து.ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா,இலங்கை,பாகிஸ்தான்,வங்காளதேசம்,ஹாங்காங், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்றன.அதில் குரூப் பி பிரிவில் இருந்த இலங்கை அணி,வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய சிறிய அணிகளிடம் தோற்று லீக் சுற்றிலேயே வெளியேறியது.
இதனால் மிக மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி கடுமையான விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.இந்த விமர்சனங்களின் எதிரொலியாக,அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக சந்திமால் அணியின் கேப்டனான நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில்,இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.அதில்,ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பொறுப்பு தினேஷ் சண்டிமாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதன்பொருட்டு,ஏஞ்சலோ மேத்யூஸ் உடனடியாக ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.