September 25, 2018
தண்டோரா குழு
கோவையில் நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவானது இன்று நடைபெற்றது.
கோவை ராம் நகர் பகுதியில் உள்ள செந்தில் குமரன் திரையரங்கில் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவான வட சென்னை திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.இதில் கோவை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் தலைவர் மணி,செயலாளர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் மத்தியில் இசை வெளியிடப்பட்டது.இதில் திரையரங்கு மேலாளர்,தனுஷ் ரசிகர் மன்றத்தின் மாவட்ட பொருளாளர் அந்தோணி,மாவட்ட பொறுப்பாளர் சதீஷ்குமார், அமைப்பாளர் பாலா,மற்றும் நிர்வாகிகள் தர்மன்,ராஜ்குமார்,வினோத்,பழனி,உட்பட ஏரளமான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.