September 25, 2018
தண்டோரா குழு
பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 2 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.ஆரம்பத்தில் 16 பேர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது விஜயலட்சுமி,ஐஸ்வர்யா,ஜனனி ஐயர்,ரித்விகா ஆகிய 4 பேர் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.
இதையடுத்து இந்த வாரம் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும்.இதற்கிடையில் கடந்த சீசனில் பிக்பாஸ் போட்டியாளராக இருந்த நடிகை ஆர்த்தி பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில்,இன்று அவர் பதிவிட்ட ஒரு ட்விட்டில் ஐஸ்வர்யாவுக்கு மறைமுகமாக வாக்களிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகை ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நம் தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது..இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே!! நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளராக கொண்டாடுவோம் என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ட்விட்டில்,
1.மக்கள் விருது – மும்தாஜ்
2.அப்பாவி விருது -சென்றாயன்
3.பிக் பாஸ் 2 வெற்றியாளர் – விஜயலட்சுமி,ரித்விகா,ஜனனி ஐயர்
4.போலி விருது – ஐஸ்வர்யா என பதிவிட்டுள்ளார்.