September 26, 2018
தண்டோரா குழு
நடிகர் கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.இதுமட்டுமின்றி தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்கிடையில்,கமல்ஹாசன் கடைசியாக நடிக்கவிருக்கும் படம் இந்தியன்-2 தான் என்று முன்பே கூறப்பட்டது.ஆனால்,கமல்ஹாசன் இந்தியன் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து வேறு ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றது.அது கமல்ஹாசன் இளையராஜா,பி.சி.ஸ்ரீராம் கூட்டணியில் வெளிவந்த தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகம் தான்.இந்த செய்தி கேட்டு கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.