September 26, 2018
தண்டோரா குழு
தனுஷ் நடிப்பில் உருவான வெற்றிமாறனின் வடசென்னை,கெளதம் மேனனின் எனை நோக்கி பாயும் தோட்டா படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.
இதற்கிடையில் தனுஷ் இயக்குநராக தனது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார்.தனுஷ் அடுத்ததாக முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘முண்டாசுப்பட்டி’ படத்தை தொடர்ந்து ராம்குமார் இயக்கியுள்ள படம் ‘ராட்சசன்’.விஷ்ணு விஷால்,அமலா பால் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகிறது.இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராம்குமார்.இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்க இருக்கிறது.வட சென்னை வெளியான பிறகு இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.