September 27, 2018
தண்டோரா குழு
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகள் நாளை மோதுகின்றன.
இந்திய அணி சுப்பர் 4 போட்டியில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில்(பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ்)எதிராக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.இதனையடுத்து இறுதிப்போட்டிக்கு நுழையும் இன்னொரு அணியை முடிவு செய்வதற்கான ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் நேற்று மோதின.இதில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்திடம் தோற்று வெளியேறியது.
இந்நிலையில்,ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காள தேசம் அணிகள் நாளை மோதுகின்றன.இந்திய அணி ஆசிய கோப்பையில் இதுவரை 1984, 1988,1990-91,1995,2010,2016 (20 ஓவர்) ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்றுள்ளது.வங்காள தேசம் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.