September 27, 2018
தண்டோரா குழு
தெலுங்கில் 2013-ஆம் ஆண்டு பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் நடிப்பில் வெளியான படம் ‘அட்டாரிண்டிகி தாரேடி’. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்த இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். முக்கிய வேடங்களில் ப்ரனிதா, நதியா, பொம்மன் இரானி, பிரம்மானந்தம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ கைப்பற்றியது. இப்படத்தின் தமிழ் ரீமேக்கிகை சுந்தர் சி இயக்கவுள்ளார். ஹீரோவாக சிம்பு நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புகழ் மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளார். அதைபோல் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரிஜினல் வெர்ஷனில் ப்ரனிதா நடித்த கேரக்டரில் நடிக்க கேத்ரின் திரசா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர் எனதகவல் வெளியாகியுள்ளது.