September 29, 2018
தண்டோரா குழு
பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 2 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.ஆரம்பத்தில் 16 பேர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது விஜயலட்சுமி,ஐஸ்வர்யா,ஜனனி ஐயர், ரித்விகா ஆகிய 4பேர் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.
இதையடுத்து இந்த வாரம் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும்.இந்நிலையில்,பிக்பாஸ் சீசன் 2 வின் கடைசி நாளான இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் விஜய் தேவரகொண்டா சென்றுள்ளார்.
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி மற்றும் கீதா கோவிந்தம் படங்கள் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் விஜய் தேவரகொண்டா.இவரது நடிப்பில் உருவான ‘நோட்டா’ படம் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக விஜய் தேவரைக்கொண்டா தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.