October 1, 2018
தண்டோரா குழு
மாயா,மாநகரம் போன்ற படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார்.அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.
இப்படத்தினை ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கவுள்ளார்.இந்நிலையில் இப்படத்திற்கு ‘மான்ஸ்டர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகியுள்ளது.இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.