October 3, 2018
தண்டோரா குழு
ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தும் பெருமையை தமிழக உயரம் தாண்டுதல் வீரர் தங்கவேலு மாரியப்பன் பெற்றுள்ளார்.
இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியா பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரும் 6ஆம் தேதி துவங்கவுள்ளது. இதில் இந்தியா, சீனா,போன்ற 43 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்திய சார்பில் விளையாட்டு நட்சத்திரங்கள் பயிற்சியாளர்கள் என மொத்தம் 302 பேர் கலந்து கொள்கின்றனர்.
இதற்கிடையில், துவக்கவிழாவில் அணிவகுத்து வரும் இந்தியா அணிக்கு தலைமையேற்று தேசிய கொடியை ஏந்திச் செல்லும் பெருமைதமிழகத்தைச் சார்ந்த உயரம் தாண்டுதல் வீரர் தங்கவேலு மாரியப்பன் பெற்றுள்ளார்.இவர் கடந்த ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார், அவரை கௌரவிக்கும் பொருட்டும், அவரது சாதனைகளை பெருமைப்படுத்தும் வகையிலும்2017ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது மற்றும் அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு இவரை கௌரவித்துள்ளது. அதைபோல் தமிழக அரசும் இவருக்கு பணப் பரிசு வழங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.