October 4, 2018
தண்டோரா குழு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுக வீரர் பிரித்வி ஷா சதம் அடித்தார்.
மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் துவங்கியது. இதில், ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் மகாராஷ்டிராவை சேர்ந்த இளம் வீரர் பிரித்வி ஷா அறிமுகம் ஆனார். அதைபோல், உமேஷ் யாதவ், முகமது ஷமி என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் காயம் காரணமாக ஹோல்டருக்குப் பதில், பிராத்வைட் கேப்டனாக களமிறங்கினார்.
இதையடுத்து இந்திய அணியில் துவக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் பிரித்வி ஆகியோர் களமிறங்கினர். லோகேஷ் ராகுல் (0) அதிர்ச்சி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் நிதானமாக ஆடி வருகின்றனர். லீவிஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய புஜாரா, 19வது அரைசதம் எட்டினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி, அறிமுக டெஸ்டில் சதம் அடித்து மிரட்டினார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. பிரித்வி (102), புஜாரா (67) அவுட்டாகாமல் இருந்தனர்.