October 4, 2018
தண்டோரா குழு
காலா படத்தின் வெற்றிக்கு பின் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் படத்தில் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழுவினர் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பேட்ட படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது லக்னோ மற்றும்
வாரணாசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ரஜினி பெரிய மீசையுடன் அமர்ந்து இருப்பது போன்ற பேட்ட படத்தின் 2 லுக் போஸ்டரை சன் பிக்ஸர் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.