குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான முட்டை பனியாரம் ரெசிபி!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான முட்டை பனியாரம் எப்படி செய்வது என்பதை தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – ஒரு கப், முட்டை – 2, சின்ன வெங்காயம் – 25 கிராம், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – 1 கொத்து, கடுகு – கால் தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும்.
அடித்த முட்டையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி முட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி முட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
முட்டை பனியாரம் ரெசிபி!
பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். முட்டைப் பணியாரம் தயார்.
கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச உடல் பரிசோதனை திட்டம் அறிமுகம்
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !