October 8, 2018
தண்டோரா குழு
வெள்ளித்திரையில் கலக்கி வரும் சினிமா பிரபலங்கள் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கிவிட்டனர்.ஏற்கனவே டிவியில் கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.தற்போது விஷால் சன் தொலைக்காட்சியில் ‘நாம் ஒருவர்’ என்ற புது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த வரிசையில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இணைந்துள்ளார்.இவர் ஜெயா தொலைக்காட்சியில் ‘உன்னை அறிந்தால்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளாராம்.இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 14ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.