October 8, 2018
தண்டோரா குழு
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் விபத்தில் சிக்கி முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டது.முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன்.இவர் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர்.ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ள இவர் தற்போது போட்டியை தொகுத்து வழங்கும் வர்ணனையாளராக உள்ளார்.
இதற்கிடையில்,கடந்த வெள்ளியன்று குவின்ஸ்லாந்தில் ஏற்பட்ட விபத்தில் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் கடுமையான காயங்கள் மற்றும் முதுகு எலும்பு முறிவுகளுக்கு உள்ளானார்.இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.அதில் தான் பெரிய ஆபத்தில் இருந்து தப்பியதாக கூறியுள்ளார்.