• Download mobile app
02 Feb 2025, SundayEdition - 3280
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நக்கீரன் கோபால் கைது – தலைவர்கள் கண்டனம் !

October 9, 2018 தண்டோரா குழு

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை பற்றி அவதூறு செய்திவெளியிட்டதாக,ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் இன்று கைது செய்யப்பட்டார்.இதையடுத்து கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.இதற்கிடையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:

பேராசிரியை விவகாரத்தில் “தொடர்” ஒன்றை வெளியிட்டு வரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை,சர்வாதிகார – பாசிச மனப்பான்மையுடன் கைது செய்திருப்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு பாசிச பாஜக அரசும் – பொம்மை அதிமுக அரசும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

நக்கீரன் குழும இதழ்களின் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டிருக்கிறார்.நக்கீரன் கோபால் எவ்வாறு குறுக்கிட்டார் என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது இதைவிட மோசமானத் தாக்குதலையும்,அச்சுறுத்தலையும் கட்டவிழ்த்து விட முடியாது.கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கக்கூடிய செயலாகவே அமையும் என கூறியுள்ளார்.நக்கீரன் கோபால் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது.அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கமல்ஹாசன்:

மக்களின் கருத்து சுதந்திரம் எப்போதெல்லாம் பாதிக்கப்பிற்குள்ளாகிறதோ அப்போதெல்லாம் அதைச் சீர்படுத்தும் மாண்பு ஊடங்களுக்கே உரியது.அந்த ஊடகங்களின் சுதந்திரத்தில் கை வைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதற்கு ஒப்பாகும்.ஆங்கிலேயர் காலத்து வாய்ப்பூட்டுச் சட்டம் தற்பொழுது வேறு ஒரு வடிவத்தில் இந்த அரசால் செயல்படுத்தப்படுகிறது.ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் ஊடக சுதந்திரம் காப்பாற்ற பட வேண்டும்.நக்கீரன் கோபால் கைதை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது.

சுப வீரபாண்டியன்(எழுத்தாளர்):

கைது செய்யப்பட்டிருப்பது நக்கீரன்கோபால் இல்லை,நாட்டின் கருத்துரிமை.இது ஒரே ஒரு ஏட்டின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இல்லை,எல்லா ஏடுகளுக்குமான சட்டத்தை மீறிய மிரட்டல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான புகார்கள்,குற்றச்சாட்டுகள் எழும் போது அதைவெளியுலகத்திற்கு கொண்டு வருவதும்,அதன்மீது முறையான நடவடிக்கை எடுக்கவற்புறுத்துவதும் பத்திரிகை சுதந்திரத்தின் உயிர்நாடியாகும்.அதை பறிக்கும் வகையில் இன்று நக்கீரன் கோபால் கைது செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் திரு.கோபால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செற்குழு தமிழகஅரசை வலியுறுத்துகிறது.மேலும்,தமிழக அரசின் இத்தகைய ஜனநாயகவிரோத நடவடிக்கையை எதிர்த்து அனைத்து கட்சிகளும்,பொதுமக்களும் வலுவான கண்டன குரலெழுப்பவேண்டமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகேட்டுக் கொள்கிறது.

இந்திய தேசிய லீக் கட்சி கண்டனம்:

இந்திய வரலாற்றில் ஒரு மாநில ஆளுநர் புகார் கொடுத்ததும்,ஒரு ஊடகவியளாலர் கைது செய்யப்பட்டதும் இதுவே முதன்முறை மத்தியில் பாஜக ஆட்சி வந்ததில் இருந்து ஆன்டிக்கு ஒரு சட்டம் அரசனுக்கு ஒரு சட்டம் என்ற நிலைப்பாட்டை காவல்துறை கடைப்பிடிக்கிறது.

எஸ்.வி.சேகர்,எச்.ராஜா போன்றவர்கள் மீது பல புகார்கள் இருந்தும் கைது செய்ய தயங்கும் காவல்துறை நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு மட்டும் உடனே நடவடிக்கை எடுத்து கைது செய்தது இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மாநில அரசுக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கிறோம்

திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி:

தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கு ஆளும் தரப்பினரால் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து நெருக்கடிகள் தரப்படுகின்றன. இதைப்பற்றி பிரதமரிடமே சென்று ஊடகவியலாளர்கள் முறையிட்டு உள்ளனர். இந்தச் சூழலில் பத்திரிக்கை சுதந்திரத்தை நெரிக்கும் செயலில் ஆளுநர் அலுவலகமே ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கிறது.இது கருத்துரிமைக்குப் பேராபத்தாகும்.இதை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் குரலெழுப்ப முன்வரவேண்டும் என்று அழைக்கிறோம்.திரு.நக்கீரன் கோபால் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் படிக்க