• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீஸ் பிரட் போண்டா செய்ய…..!

October 10, 2018 tamil.webdunia.com

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 5
கேரட் – 1 துருவியது
கோஸ் – 1/2 கப் (பொடியாக)
கேப்சிகம் – 1 (பொடியாக)
சீஸ் – 1 கப் துருவியது
பச்சை மிளகாய் – 2
பூண்டு விழுது – அரை ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
பிரட் – 12 துண்டுகள்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு,கேரட் துருவியது,கோஸ் பொடியாக நறுக்கியது,கேப்சிகம் போட்டு அதனுடன் துருவிய சீஸ்,பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய்,மிளகு தூள்,மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு,அதனை நீரில் நனைத்து,பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து,அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து,பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி,நன்றாக காய்ந்ததும்,அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.இப்போது சுவையான சீஸ் பிரட் போண்டா தயார்.

மேலும் படிக்க