October 10, 2018
தண்டோரா குழு
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.மேலும் வரலட்சுமி சரத்குமார்,ராதாரவி,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது.
இதற்கிடையில்,தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.