October 10, 2018
தண்டோரா குழு
தமிழில் காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.அதன் பின் பல்வேறு வெற்றி படங்களில் நடித்த அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம்.தற்போது இவர் நடித்துள்ள கனா மற்றும் தனுஷின் வடசென்னை படம் ரிலீஸுக்கு தயராக உள்ளது.
இந்நிலையில்,தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார்.க்ராந்தி மாதவ் இயக்கவிருக்கும் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளனர். இவர் ஏற்கனவே 2 மலையாள படங்களிலும்,ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.