October 10, 2018
தண்டோரா குழு
AAA படத்திற்கு பிறகு அடுத்தடுத்து சர்ச்சைகளை சந்தித்து வந்த சிம்புவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.மணிரத்தினம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்த சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் – த்ரிவிக்ரம் கூட்டணியில் 2013-ல் வெளியான ‘அத்தாரின்டிக்கி தாரேதி’ படத்தின் ரீமேக்காகும்.இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.சமீபத்தில் ஜார்ஜியாவில் பாடல் காட்சியுடன் தொடங்கப்பட்ட ஷூட்டிங்,தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் தற்போது மஹத் இணைந்திருக்கிறார்.சிம்புவின் நீண்ட நாள் நண்பரான மஹத்,சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பிரபலமானார்.ஏற்கனவே மஹத் சிம்பு நடித்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.