October 13, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் சென்னை 28,அஞ்சாதே ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை விஜயலக்ஷ்மி.பிரபல இயக்குனரான அகத்தியனின் மகளான விஜி திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையில் அறிமுகமானார்.
இதற்கிடையில்,பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.அந்நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். இந்நிலையில்,பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜிக்கு மீண்டும் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க விஜி ஒப்பந்தமாகியுள்ளார்.இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.