October 15, 2018
தண்டோரா குழு
தமிழில் விஷ்ணு விஷாலின் ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம்குமார். முழுக்க முழுக்க காமெடி படமான இப்படம் செம்ம ஹிட்டானது.
இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பின் ராம்குமார் இயக்கிய ‘ராட்சசன்’ படத்திலும் விஷ்ணுவே ஹீரோவாக நடித்திருந்தார். த்ரில்லர் படமான இப்படத்தில் விஷ்ணு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ராம்குமார் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளார்.அந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.