September 1, 2016 தண்டோரா குழு
ஆம்பூர் அருகே மிட்டாளத்தில் ஒவ்வொரு பணிக்கும் அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரி கட்டாயப்படுத்தி லஞ்சம் வாங்குவதாகக் கூறப்பட்டது.இந்நிலையில் தன்னுடைய பெயரில் வந்த நிலத்தைப் பட்டா மாறுதலுக்காக குமார் என்பவர் விண்ணப்பித்து இருந்தார்.
அந்த வேலையை முறையாகச் செய்து முடிக்காத கிராம நிர்வாக அதிகாரி சத்யா.அப்படி முடித்துத் தரவேண்டும் என்றால் 1,500 லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க மனமில்லாத குமார் இது குறித்து ஆம்பூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தனுப்பிய லஞ்சஒழிப்பு காவலர்கள்.அந்தப் பணத்தை விஏஓ சத்யா வாங்கியவுடன்,அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்தனர்.பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.