October 17, 2018
தண்டோரா குழு
ஆடுகளம்,பொல்லாதவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் வடசென்னை.
இப்படத்தை தனுஷ் தனது வண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் இருக்கிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா,சமுத்திரக்கனி,அமீர்,டேனியல் பாலாஜி,கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இப்படத்தை வெற்றிமாறன் தொடங்கும் போது,வடசென்னை படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது.பல்வேறு காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை எனக் கூறியிருந்தார்.அதைப்போல் திரையில் தனுஷிற்கும் சிம்புக்கும் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் இன்று (அக்.17) ‘வடசென்னை’ வெளியாகியுள்ள நிலையில் சிம்பு வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,அன்புக்குரிய நண்பர் தனுஷ்,வெற்றிமாறன் மற்றும் ‘வடசென்னை’ படக்குழுவுக்கு என் சார்பாகவும் மற்றும் என் குடும்பம்,ரசிகர்கள் சார்பாகவும் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.திரையில் எங்களுடைய போட்டி தொடரும், சமூக வலைதளங்களில் அல்ல.என் ரசிகர்களும்,என்னைப் பின் தொடர்பவர்களும் நல்ல படங்களை ஆதரிப்பார்கள். ‘வடசென்னை’ வெற்றிப்படமாக அமையும் சிம்பு கூறியிருக்கிறார்.சிம்புவின் இந்த அறிக்கைக்கு,தமிழ் திரையுலகில் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.