• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிராமத்தையே ஒளிரச் செய்த கென்ய வீராங்கனை

September 2, 2016 தண்டோரா குழு

ரியோ ஒலிம்பிக்கில் நமது நாட்டு P.V.சிந்துவும், சாக்ஷி மாலிக்கும் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் பெற்று நாட்டையே கௌரவித்தார்கள்.

இதே ஒலிம்பிக் போட்டியில் கென்யாவைச் சேர்ந்த ஃபைத் கிப்யெகொன் 1500 மீட்டர் பந்தயத்தில் எதியோப்பியாவின் ஜென்ஸ்பெ டிபபாவைத் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றதை நாம் அறிவோம்.அதற்குப் பரிசாக அவர் வேண்டிக்கொண்டதன் பேரில் அவரது கிராமத்தையே மின்சார ஒளிமூலம் பிரகாசிக்கச் செய்தது கென்ய அரசு.

கிப்யெகொன் கென்ய நாட்டின் நகுரு ஜில்லாவின் நடபிபிட் கிராமத்தைச் சேர்ந்தவர்.கடந்த 26 வருடங்களாகவே அவர் பிறந்தது முதல் மின்சார ஒளியையே கிராமத்திற்குள் கண்டிராதவர்.கிராம மக்கள் அனைவரும் இருட்டையே பழக்கப்படுத்திக் கொண்டவர்கள்.

ஒலிம்பிக்கில் தனது மகள் தங்கப் பதக்கம் வென்று நாட்டையையே கௌரவித்ததற்குப் பரிசாக ஃபைத்ந் தந்தை மொத்த கிராமத்திற்கும் மின்சார இணைப்பு தரவேண்டும் என்று அரசிடம் விண்ணப்பித்தார்.

அதன் விளைவாக 9 நாட்களில் கிராமம் முழுவதும் மின்சாரத்தினால் இணைக்கப்படும் வகையில் அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டது.சாம்சங்க் நிறுவனம் ஒரு தட்டைத் திரை கொண்ட தொலைக் காட்சிப் பெட்டியை பரிசளிக்க உறுதி அளித்துள்ளது. இதன் மூலம் தன் மகள் விளையாடுவதையும் பரிசு பெறுவதையும் காணமுடியும் என்று ஃபைத்ன் தந்தை மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

மேலும் கிராமத்தையே ஒளிவெள்ளத்தில் மூழ்கச் செய்யும் ஒப்பற்ற திறமை கொண்ட மகளைத் தனக்களித்த கடவுளுக்கு நன்றி, மற்றும் அக்கடவுள் தனது மகளுக்கு கென்ய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல பரிசுகளைப் பெற சிறந்த ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டுமென்றும் வேண்டிக்கொள்வதாக சாமுவல் கோச் தெரிவித்தார்.

அதே தருணம் நமது நாட்டில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பணமுடிப்புகளும்,பலபல பரிசுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.விலை உயர்ந்த ஊர்தியான BMW காரும் பரிசாக அளிக்கப்பட்டது. மிகுந்த பரப்பளவுள்ள நிலமும் கொடுக்கப்பட்டது.பதக்கங்கள் வென்றவர்களுக்கு மட்டுமின்றி சிந்துவின் பயிற்சியாளரான கோபிசன்ட்க்கும்,4 வது இடம் பெற்ற ஜிம்னாஸ்டிக் தீபா கர்மகர்க்கும் உயர்ரக கார்கள் பரிசளிக்கப்பட்டன.

அதுமட்டுமல்லாது ஹைதராபாத்தைச் சேர்ந்த சிந்து தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் ஆந்திராவும், தெலுங்கானாவும்,உரிமைப் போரில் ஈடுபட்டுள்ளன. கென்யாவின் தங்கப் பதக்க வீராங்கனையை மனதில் கொண்டு, நமது வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்ட அதீத பரிசுகளை வளரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க உபயோகப் படுத்தவேண்டும் என்பது பலரின் கருத்து.

மேலும் படிக்க