• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விமான விபத்தில் தான் சுபாஷ் உயிரிழந்தார் உறுதிப்படுத்தியது ஜப்பான் அரசு

September 2, 2016 தண்டோரா குழு

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் தான் உயிரிழந்தார் என்று ஜப்பான் அரசு உறுதி செய்துள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவரான சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர்.இவர் 1945ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ம் தேதி தைபேயில் நடந்த விமான விபத்தில் உயிர் இழந்ததாகக் கூறப்பட்டது.ஆனால், பலர் அவர் இன்னும் உயிரோடு இருப்பதாக நம்பி வருகின்றனர்.அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதைக் குறித்த சர்ச்சை பல நாட்களாகவே இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

அவருடைய மரணம் குறித்த சர்ச்சைகளை அடுத்து, அவர் மறைந்தது உண்மை தானா என்பதை விசாரிக்க 3 விசாரணை ஆணையங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டன. அதில் 2 விசாரணை ஆணையங்கள்,சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்தது உண்மை தான் என்று கூறின.ஆனால், நீதிபதி எம்.கே. முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட 3வது விசாரணை ஆணையம் மட்டும் விமான விபத்திற்கு பின்பும் நேதாஜி சுபாஷ் உயிரோடு தான் இருக்கிறார் என்று கூறியது.இந்நிலையில், சுபாஷ் சந்திர போஸ் உயிரிழப்பு தொடர்பான ஆவணங்களை ஜப்பான் அரசு வெளியிட்டுள்ளது.

அந்த ஆவணங்கள்,1945ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ம் தேதி தைவான் நாட்டில் தைபே விமான தளம் அருகே நடந்த விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார் என்று தெளிவாக்கியுள்ளது.மேலும், ஜப்பான் வெளியிட்டுள்ள 17 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில் 7 பக்கங்கள் ஜப்பான் மொழியிலும் 10 பக்கங்கள் ஆங்கிலத்திலும் உள்ளன.

இதில் விமான விபத்து நடந்தவுடன் சுபாஷ் சந்திரபோஸ் படுகாயத்துடன் பிற்பகல் சுமார் 3 மணி அளவில் தைபே ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதே இரவு 7 மணிக்கு உயிரிழந்தார் என்று ஆவணத்தில் காணப்படுகிறது.மேலும், ஆகஸ்டு 22ம் தேதி தைபேயில் நேதாஜி சுபாஷ் சந்தர போஸ்சிற்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதற்கான குறிப்புகளும் ஆவணத்தில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க