October 24, 2018
தண்டோரா குழு
இந்திய அணி கேப்டன் விராட் கோலி குறைவான போட்டிகளில் விளையாடி 10,000 ரன்களை கடந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா,வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி,பேட்டிங் தேர்வு செய்தார்.இதையடுத்து,துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா (4),ஷிகர் தவான் (29) ரன்களுக்கு அவுட் ஆகினர்.பின்னர், இணைந்த கேப்டன் கோஹ்லி,அம்பதி ராயுடு இருவரும் தங்கள் பங்கிற்கு அரைசதம் எட்டினர்.அம்பதி ராயுடு 70 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கோஹ்லி 81 ரன் எடுத்த போது ஒருநாள் அரங்கில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை வேகமாக எட்டிய முதல் வீரர் ஆனார்.தன்னுடைய 205-வது இன்னிங்ஸில் விளையாடி வரும் கோலி 10000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கா் 259 போட்டிகளில் விளையாடி 10,000 ரன்கள் கடந்ததே தற்போது வரை சாதனையாக இருந்தது.இதனை இந்திய கேப்டன் விராட்கோலி முறியடித்துள்ளார்.
மேலும்,இந்தியாவுக்காக ஒருநாள் அரங்கில் 10,000 ரன்கள் எடுத்த நான்காவது வீரர் ஆனார்.முதல் மூன்று இடங்களில் சச்சின் (18,426 ரன்),கங்குலி (11,221), டிராவிட் (10,768) உள்ளனர்.அதைபோல் ஒட்டுமொத்த ஒருநாள் அரங்கில் இந்த இந்த இலக்கை எட்டிய ஐந்தாவது வீரர் கோஹ்லி ஆனார்.முதல் நான்கு இடங்களில் சச்சின் (18,426),கங்குலி (11,363),டிராவிட் (10,889),தோனி (10,123) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.