October 25, 2018
தண்டோரா குழு
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்,முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் வரலட்சுமி சரத்குமார்,ராதாரவி,யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது.இப்படம் வரும் நவம்பர் 6ம் தேதி தீபாவளியன்று வெளியாகும் என கூறப்பட்டது.ஆனால் திடீரென படம் தீபாவளிக்கு முன்பாக நவம்பர் 2ம் தேதியே வெளியாக இருக்கிறது என வதந்திகள் பரவியது.சர்கார் கதை திருட்டு பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்திருப்பதால்,இந்த ரிலீஸ் தேதி மாற்றம் உண்மையாக இருக்கலாமே என்கிற குழப்பமும் நிலவியது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
இந்நிலையில்,படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் படம் நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது எனப் போஸ்டரை வெளியிட்டு,நிலவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.மேலும் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.