October 25, 2018
தண்டோரா குழு
தீரன் அதிகாரம் ஒன்று,கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் திரைப்படம் ‘தேவ்’.இப்படம் கார்த்தியின் 17-வது திரைப்படமாகும்.
ஆக்ஷன்,அட்வென்ச்சர்ஸ்,ரொமான்ஸ் என கலர்புல்லாக எடுக்கப்பட்டு வரும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார்.ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடித்துள்ளார்.மேலும்,பிரகாஷ்ராஜ்,ரம்யா கிருஷ்ணன்,அம்ருதார வம்சி என முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.