October 27, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.அதன் பின் பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார்.சமீபத்தில் இவரது நடிப்பில் நோட்டா படம் வெளியானது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகை யாஷிகா ஆனந்த்,
“#Metoo வரவேற்கதக்க ஒன்று.அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.எல்லா துறைகளிலும் இம்மாதிரியான பாலியல் தொந்தரவுகள் இருக்கின்றன.அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.தனிப்பட்ட முறையில் பிரபல இயக்குநர் ஒருவரால் நானும் பாதிக்கப்பட்டு உள்ளேன்.காவல்துறை அதிகாரி ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.அவர் மீது புகார் அளித்து அவர் பின் இடம் மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்”.